News April 8, 2025
குழந்தை வரன் தரும் அருள்மிகு மதுரகாளியம்மன் அம்மன்

பெரம்பலூர்,சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு மாவிளக்கு ஏத்தி, அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். சித்திரைபவுர்ணமி, கார்த்திகைதீபம் போன்றவை இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் கல்யாண பிரச்சினை, குழந்தை பிரச்சனை,குடும்ப பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 7, 2025
பெரம்பலூர் மக்கள் கவனத்திற்கு…

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் நவ.11 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், அய்யலூர், வெண்பாவூர், பெரியவெண்மணி, சிறுகன்பூர் ஆகிய கிராமங்களில் (8.11.2025) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


