News March 21, 2025
குழந்தை திருமணம்: கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையை 99409-91160 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2025
26 தாசில்தாரர்களுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் வருவாய்த்துறையில் தாசில்தாராக பணிபுரிந்து வரும் 26 அலுவலர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் தாசில்தாராக இருந்த மகேஸ்வரி, கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
News March 28, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் முக்கிய மாற்றங்கள்

சேலம் வழியாக செல்லும் சாம்பல்பூர்- ஈரோடு- சாம்பல்பூர் சிறப்பு ரயில்களில் (08311/08312) வரும் ஏப்ரல் முதல் மே 02- ஆம் தேதி வரை மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், ஸ்லீப்பர் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 28, 2025
ஓரினச் சேர்க்கை மோகம் – வாலிபருக்கு கத்திக்குத்து

மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.