News August 18, 2025
குழந்தை திருமணத்தை ஆதரித்தால் சிறை

பெண் குழந்தைகளுக்கு 18 வயதும், ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பதும், ஆதரிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர இயலாது. குழந்தை திருமணத்தை நடத்தி வைத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் 1098 அல்லது 181 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
Similar News
News November 5, 2025
வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
விருதுநகர்:காரின் மேல் அமர்ந்து சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து விதிகளை மீறிய மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது.
News November 4, 2025
விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.


