News May 28, 2024
குழந்தை இறந்தத சோகத்தில் தந்தை தற்கொலை

நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பழனி (32). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி காயத்திரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.பின்னர் சிறிது நேரத்தில் அக்குழந்தை உயிரிழந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
BREAKING: திருப்பத்தூர்-ஊராட்சி மன்ற தலைவர் நீக்கம்!

திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கடந்த 6ம் தேதி நகை திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திமுக-விற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இவரை இன்று (செப்.,9) கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். பாரதி மீது திருட்டு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
திருப்பத்தூர்: காவல் நிலையத்தை சிறை பிடித்த பொதுமக்கள்!

ஆம்பூர், தட்டப்பாறை கிராமத்திலிருந்து நேற்று (செப்.,8) இரவு பாட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு விறகு ஏற்றி சென்ற ட்ராக்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குப்புராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயிரிழந்தார். டிராக்டர் டிரைவர் விநாயகம் தப்பி ஓடிய நிலையில், அவரை கைது செய்யக்கோரி சதீஷின் உறவினர்கள் இன்று (செப்.,9) உமராபாத் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.