News August 4, 2025

குழந்தையை சாலையில் விட்டுச்சென்ற மர்ம நபர்!

image

குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 2 சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர், குழந்தையை இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதையடுத்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 28, 2025

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.27) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.89-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News August 28, 2025

நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. எனவே வரும் 4 நாட்களில் காற்று மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 12 முதல் 16 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஆக.28) 3 மி.மீ, நாளை(ஆக.29) 3 மி.மீ, வருகிற 30ஆம் தேதி, 6 மி.மீ, 31ஆம் தேதி 1 மி.மீ எனும் அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

News August 28, 2025

நாமக்கல் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!