News March 28, 2025
குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை

மண்ணடி, லிங்குச் செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித் (33). இவருக்கு 2.5 வயதில் பாஹிமா என்ற பெண் குழந்தை உள்ளது. இவருக்கு, தனது மனைவி நிலோபரின் நடத்தையில் கடந்த சில தினங்களாக சந்தேகம் இருந்துள்ளாது. அதனால், கடந்த 2 தினங்களுக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியுளார். இதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 14, 2025
மாதம் ரூ.1,000 வேண்டுமா? இங்கு போங்க

சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) திருவொற்றியூர், கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 13, 2025
புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில் புனித ஜார்ஜ் கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 5அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
News August 13, 2025
சென்னையில் மூக்கை கடித்து குதறிய நாய்

பூவிருந்தவல்லி அருகே கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த ராட்வீலர் நாய் கடித்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அந்நாய் கடித்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவரின் மூக்கு துண்டானது. மேலும், மேல் சிகிச்சை்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னையில் நாய் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.