News November 23, 2025
குழந்தைத்தனமாக செயல்படும் மாதம்பட்டி: ஜாய் கிரிசில்டா

தன்னை வீழ்த்துவதற்காக மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கூட்டணியை உருவாக்கி வேலை செய்வதாக ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னுடைய செல்போன் எண்ணை பலரிடம் கொடுத்து மெசெஜ் அனுப்ப சொல்லுவதாகவும், இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் மாதம்பட்டி ஈடுபடுவார் என தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உங்களுடைய பணம் பத்தும் செய்யும், ஆனால் உண்மையை ஒருபோதும் புதைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
கல்வியை வியாபாரமாக்கிய திமுக அரசு: அண்ணாமலை

திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சிதைத்ததே, இதற்கு முக்கிய காரணம்; ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி நடுத்தர குடும்பத்தினர் மீது திமுக அரசு கடன் சுமையை திணித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.
News February 2, 2026
நாட்டுக்கோழி Vs பிராய்லர் முட்டை: குழந்தைக்கு எது Best?

பொதுவாக பிராய்லர் முட்டையை விட நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது என்ற ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், 2 முட்டைகளுமே சரிசமமான சத்துக்களை கொண்டவைதான். புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 என அனைத்தும் சமமாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். 2 கோழிகளும் வளர்க்கப்படும் சூழலை வைத்தே வெள்ளை முட்டை பற்றிய தவறான புரிதல் உருவாகியிருக்கிறது. எனவே 1+ வயது குழந்தைக்கு எந்த முட்டையை வேண்டுமானாலும் கொடுக்கலாம். SHARE.
News February 2, 2026
தர்மேந்திரா இருந்திருந்தால்.. மனைவி ஹேமமாலினி உருக்கம்

பாலிவுட்டின் ஹீ-மேன் என அழைக்கப்பட்ட தர்மேந்திரா உடல்நலக் குறைவால் கடந்த நவம்பரில் காலமானார். மறைவுக்கு பிறகு அவருக்கு பத்ம விபூசண் விருதை மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள அவரது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி, இது தங்களுக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டார். முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் தர்மேந்திராவும் சந்தோஷப்பட்டிருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


