News January 30, 2026
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.
Similar News
News February 11, 2026
ஆண்களே.. இதை செய்தால் உங்க தலைமுடி Soft ஆகும்

தலைமுடியை பராமரிப்பதில் சரியாக அக்கறை காட்டாததால்தான் உங்கள் முடி வறண்டு போய் இருக்கிறது. இதனை சாஃப்ட் ஆக்க, தலைக்கு குளித்த பின் சல்பேட், பாரபென் இல்லாத கண்டிஷனரை பயன்படுத்துங்கள். வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு கண்டிஷனர் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து அலசினால் போதும். அத்துடன், தினமும் ஆர்கன் ஆயில் இருக்கும் சீரமை தலைக்கு தடவுங்கள். அனைத்து ஆண்களுக்கும் SHARE THIS.
News February 11, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருப்பதால், எவ்வளவு உயர்த்தப்படும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், மார்ச் முதல் உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை அரசு விடுவிக்கும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், மார்ச் முதல் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வழங்குவதற்கான சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News February 11, 2026
ரமணா பட ஸ்டைலில் திமுக மாநாட்டில் பேசிய ஸ்டாலின்

ஒவ்வொரு பூத் நிர்வாகியும் 50 வாக்குகளை பெற்று தந்தாலே திமுகவின் வெற்றி உறுதி என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருவிடந்தையில் நடைபெற்று வரும் திமுக பூத் கமிட்டி பயிற்சி மாநாட்டில் பேசிய அவர், TN-ல் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75,000. ஒவ்வொரு பூத்துக்கும் நம்முடைய குறைந்தபட்ச டார்கெட் 350 வாக்குகள். இதனை நிறைவேற்றினாலே 2.60 கோடி வாக்குகளுக்கு மேல் திமுக கூட்டணி பெற்றுவிடும் என தெரிவித்துள்ளார்.


