News June 26, 2024
குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யா தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 2, 2026
புதுகை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் சாங்கிராப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(60). இவர் சாங்கிராப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது,அவ்வழியாக பைக்கில் வந்த கார்த்திகேயன் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தில், சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 2, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News March 1, 2026
புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


