News February 17, 2025
குழந்தைகள் கல்வியில் மேன்மையடைய திருவந்திபுரம் செல்லுங்கள்.

திருவந்திபுரம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில், தென்னிந்தியாவில் ஹயக்ரீவருக்கான ஒரே புராதான கோவிலாக கருதப்படுகிறது. ஹயக்ரீவர், கல்வி மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். குழந்தைகள் கல்வியில் சிறக்க இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு.
Similar News
News August 14, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று (ஆக.14) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
கடலூர் மக்களே.. ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு!

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து பெறலாம். SHARE IT NOW!
News August 14, 2025
மீன் குஞ்சுகள் இருப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

கடலூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகேயுள்ள கடற்பகுதியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை இயக்குனர் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.