News August 12, 2025
குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

நெல்லை மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நாளை 13ம் தேதி ஆரம்பமாகிறது. ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் என்பது குழந்தைகளுக்கு கை கால் மற்றும் மூளை செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 593 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.
Similar News
News August 12, 2025
இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 12, 2025
நெல்லையில் கொலை அளவு 42% குறைவு – எஸ்பி தகவல்

நெல்லை எஸ்.பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தாண்டு நெல்லை ஊரக மாவட்டத்தில் இதுவரை 18 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2024ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 10 %, 2023ல் பதிவான கொலை வழக்குகளை விட 22%, 2022 -ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 42% குறைவாகும். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் பெருமளவு
குறைந்துள்ளது என கூறியுள்ளார். (உங்கள் கருத்து என்ன?)
News August 12, 2025
நெல்லை காவல்துறை சார்பில் பெண்களுக்கான அறிவிப்பு

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நெல்லையில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <