News February 27, 2026
குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை: அன்புமணி

கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். இதில், திமுக நிர்வாகி கைதானதை X-ல் சுட்டிக்காட்டியுள்ள அவர், TN-ல் நடக்கும் பல குற்றங்களுக்கு திமுகவினரே காரணம் என சாடியுள்ளார். மேலும், குற்றங்களை தடுக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என பேசிய CM ஸ்டாலின், திமுகவினர் செய்யும் குற்றங்களை வேடிக்கை பார்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த பதட்டங்களை தணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. ஆப்கானிஸ்தானுடனான சண்டையில் 274 தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. முன்னதாக, தாலிபான் நடத்திய தாக்குதல்களில் 50 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
News February 28, 2026
திமுகவில் பாஜகவின் அடிமை ரோபோ: தவெக

திமுகவில் OPS இணைந்ததை, பூஜ்ஜியம் இன்னொரு பூஜ்ஜியத்துடன் சேர்ந்துள்ளதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தனது X பதிவில், பாஜகவின் ஆகச்சிறந்த அடிமை ரோபோ என திமுகவால் விமர்சிக்கப்பட்டவர் இன்று அக்கட்சியிலேயே தஞ்சம் புகுந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், கொள்கைக்காக கூட்டணி சேர்ந்த காலம் போய், தற்போது ‘கொள்ளை’ & ‘கல்லா’விற்காக கூட்டணி அமைக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
விஜய்-சங்கீதா விவாகரத்து.. அண்ணாமலை ரியாக்ஷன்

விஜய்-சங்கீதா விவாகரத்து விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். இது விஜய், சங்கீதா, கோர்ட் தொடர்புடைய பிரச்னை என்றும், ஒரு தனிமனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டத் தான் செய்வார்கள் எனக் குறிப்பிட்ட அவர், எல்லா அரசியல் தலைவர்களையும் போல் விஜய்யும் இதை கடந்து செல்ல வேண்டும் என்று பேசியுள்ளார்.


