News January 15, 2026
குளிர்காலத்தில் வரும் முக்கிய பிரச்னை.. சரி செய்ய TIPS!

குளிர்காலத்தில் எளிதில் முடி வறண்டு, முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். இதனை தடுக்க 5 வழிகளை பின்பற்றினால் போதும். ➤தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து, 3 நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம் ➤Sulphate, Paraben free ஷாம்பு பயன்படுத்துங்கள் ➤கண்டிஷனரை பயன்படுத்துவது அவசியம் ➤முடியை பளபளப்பாக வைக்க சீரம் போடுங்கள் ➤இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம். SHARE.
Similar News
News April 6, 2026
கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்பு மனு தாக்கல்

கடலூர் மாவட்டத்தில் இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் ஆவார்கள்.
News April 6, 2026
பொம்மை முதல்வராக ரங்கசாமி உள்ளார்: ஸ்டாலின்

கவர்னர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதல்வராக பாஜக வைத்துள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், புதுச்சேரியில் ஆல் இன் ஆலாக கவர்னர்தான் செயல்பட்டு வருவதாகவும் சாடியுள்ளார். மேலும், 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை எனவும், அதை தர பாஜகவுக்கு மனமில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
News April 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.6) இரவு 10 முதல், நாளை (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


