News January 5, 2026
குளித்தலை: மகளைக் காப்பாற்ற.. தந்தை உயிரிழந்த சோகம்

குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மகள் தனலட்சுமியை வீட்டில் வேலை செய்யாதது குறித்து திட்டியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது மகள் கிணற்றின் ஓரத்தில் நின்றதை பார்த்து காப்பாற்ற குதித்த அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
கரூர்: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு (28.01.2026) இன்று கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை) அலுவலக நாளாக நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE IT
News January 27, 2026
கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.1.26 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல், இன்று தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கரூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)


