News January 9, 2026
குளித்தலை அருகே பயங்கர விபத்து!

கரூர் மாவட்டம் கோட்டமேட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் (21), திண்டுக்கல் ஓதுவார் பள்ளியில் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தார். இன்று இவர் தனது பைக்கில் குளித்தலை – மணப்பாறை சாலையில் கோட்டமேடு யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே ஞானவேல் என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பிரவீன் குமார் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
கரூருக்கு பெருமை சேர்த்த 8 வயது சிறுமி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிமேடு பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் மகள் சன்மதி (8). இவர் உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பென்சக் சிலாட்’ (Pencak Silat) தற்காப்பு கலைப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த இச்சிறுமியைப் பாராட்டி, பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
News February 6, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.