News October 18, 2025
குளித்தலை அருகே டிராக்டர் மோதி பெண் பலி!

குளித்தலை அடுத்த குண்டன் பூசாரி கிராமத்தில்,நேற்று முன்தினம் சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கன்னியம்மாள், (30), பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த வள்ளி, (70), ஓந்தாய், (70), ஆகியோர் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உழவு பணி மேற்கொள்ள வந்த டிராக்டர் கன்னியம்மாள் உள்பட மூவர் மீதும் மோதியது. இதில் ஓந்தாயி உயிரிழந்தார். தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News October 18, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஆரம்பத் தொகையாக 15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் (www.tahdco.com) இந்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்கள். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News October 18, 2025
கரூர்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
கரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து உழவன் செயலி வாயலாக Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!