News June 13, 2024
குளித்தலை அருகே சிறுவன் போக்சோவில் கைது

குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். அதிக வயிற்று வலியும், ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் மீது வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 20, 2025
கரூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 20, 2025
கரூரில் இலவச விளையாட்டு பயிற்சி

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கையுந்து பந்து, ஜூடோ,கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகட்திற்கு நேரடியாகவோ அல்லது 7401703493 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
News April 20, 2025
கரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 48 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <