News December 28, 2025

குளித்தலையில் 7 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் கண்ணன் (61), பிரகாஷ் (27), பழனிச்சாமி (46), முத்துசாமி (69), குமரவேல் (49), சக்திவேல் (60) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 169 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 29, 2025

BREAKING: அரவக்குறிச்சியில் அதிரடி காட்டிய செங்கோட்டையன்!

image

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரியமுல் ஆசியா இன்று அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.செங்கோட்டையன் கட்சியின் இணைந்த நாள் முதலே அதிமுகவில் உள்ள பலர் தவெக இனைவார்கள் என தெரிவித்தார். அதன்படி நேற்று அதிமுக ஓமலூர் EX எம்எல்ஏ இணைந்தநிலையில் தற்போது மரியமுல் ஆசியா இணைந்துள்ளார்.

News December 29, 2025

கரூர் மாவட்டத்தில் 4 பேர் அதிரடி கைது!

image

கரூர், பசுபதிபாளையம், க. பரமத்தி, வாங்கல் ஆகிய காவல்நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற விக்கி (36), மாரியம்மாள் (67), அன்பழகன் (48), மலர்கொடி (55) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News December 29, 2025

கரூர்: சைக்கிள் ஓட்டத் தெரியுமா? அரசு வேலை ரெடி!

image

கரூர் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!