News December 10, 2025
குளித்தலையில் போலியான லாட்டரி விற்ற நபர் கைது!

குளித்தலை பெரியபாலம் பகுதியில் பொதுமக்களிடம் போலியான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, ஐநூற்றுமங்களம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து நேற்று பெரியபாலம் பகுதியில் லாட்டரி விற்ற தண்ணீர் பள்ளியை சேர்ந்த ரமேஷ் (51) என்பவர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் போலியான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 11, 2025
கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 11, 2025
அரவக்குறிச்சி: மன விரக்தியில் விபரீத முடிவு!

அரவாக்குறிச்சி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை செய்த மணி, கடந்த இரண்டு வருடங்களாக கழுத்து வலி சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, வலியால் மன விரக்தியில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரவாக்குறிச்சி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News December 11, 2025
கரூர்: லாட்டரி விற்றவருக்கு காப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் கடைவீதி பகுதி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் லாட்டரி விற்ற சரவணமூர்த்தி (55) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 20 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


