News November 3, 2024

குளித்தலையில் இருந்து கொசூருக்கு புதிய பஸ் தொடக்கம்

image

கரூர்: குளித்தலையில் இருந்து மேலக்கம்பேஸ்வரம் வழியாக கொசூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த பஸ் குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் . பின்னர் கொசூரில் இருந்து அதே வழித்தடத்தில் குளித்தலைக்கு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News November 19, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்

News November 19, 2024

ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு

image

கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப்பணியிட நேர்முகத் தேர்வுக்கு அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார். தகுதியானவர்களுக்கு வரும் டிசம்பர் 2 முதல் 8 வரை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு https://drbkarur.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News November 19, 2024

கரூரில் இன்று மழை பெய்யலாம் 

image

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.