News November 15, 2024
குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி மாணவர் பலி

கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் கமலக்கண்ண (14) கோவிலம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் நண்பர்களுடன் சுண்ணாம்பு கொளத்தூர் சிவா விஷ்ணு கோயில் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். நீச்சல் தெரியாத கமலக்கண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
Similar News
News March 1, 2026
செங்கை: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். இதன்படி<
News March 1, 2026
செங்கை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
செங்கை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

செங்கை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


