News August 24, 2024

குளத்தில் குதித்த வன்கொடுமை குற்றவாளி பிணமாக மீட்பு!

image

அசாமின் நகோனில் குற்ற சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட முக்கிய குற்றவாளி தபாஸுல் உயிரிழந்துள்ளார். வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களில் தபாஸுலை அங்கு அழைத்து சென்றபோது, அவர் கைவிலங்குடன் தப்பியோடி அருகே உள்ள குளத்தில் குதித்தார். அவரை விடியும்வரை தேடிய போலீசார் தீவிர தேடுதலுக்குப் பிறகு இன்று பிணமாக கண்டெடுத்தனர்.

Similar News

News April 8, 2026

தேமுதிகவை காப்பாற்றியது அதிமுகதான்: EPS

image

அதிமுகவின் உதவியை மறந்து விட்டு திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்துள்ளதாக EPS குற்றம்சாட்டினார். ஆத்தூரில் பிரசாரம் செய்த அவர், வெண்டிலேட்டரில் இருந்து தேமுதிகவை காப்பாற்றியது அதிமுகதான் என்றார். கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டு அவரவர் சின்னங்களை மீட்டு கொடுத்தது அதிமுக தான் என்றும், கூட்டணியில் சேரும் கட்சிகளின் காலை வாரிவிடுவது தான் திமுகவின் வழக்கம் எனவும் சாடினார்.

News April 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 8, பங்குனி 25 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News April 8, 2026

BREAKING: ஈரான் போர்.. டிரம்ப் இரவில் பரபரப்பு அறிவிப்பு

image

பாக்., PM ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் சம்மதித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், இன்று ஈரானுக்கு எதிரான அழிவுகரமான தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு <<19594806>>பாகிஸ்தான் கோரியது<<>>. அதன்படி ஹார்முஸ் நீரிணையை திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்திற்கு நிறுத்திவைக்க தான் ஒப்புக்கொள்வதாகவும், இது இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!