News August 8, 2025
குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. இருப்பினும் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குற்றாலம் பகுதிகளுக்கு வருகை புரிந்து குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.
Similar News
News August 8, 2025
தென்காசி அரசு மருத்துவமனைகளில் வேலை

தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஆலோசகர் (யோகா & இயற்கை மருத்துவம்), உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி: 8th, B.Sc, Diploma ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்டு 20க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
News August 8, 2025
கடையநல்லூர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

கடையநல்லூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. குறைந்தபட்ச கல்லித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர் என்ற முகவரியிலும் 04633-290270 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
News August 8, 2025
தென்காசியில் உலக தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 இன்று ஆகஸ்ட் 8 நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்.தலைமை வகித்து பேசினார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.