News April 16, 2025

குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த வல்லம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை என தெரியவந்துள்ள நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 16, 2025

தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

image

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தென்காசி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

News April 16, 2025

குறைகளை அனுப்ப தென்காசி எம்பி வேண்டுகோள்

image

தென்னக ரயில்வே வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்ரல் கடைசி மாதத்தில் நடைபெற உள்ளது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை எனக்கு தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் நம்பர் 6382081840 மூலமாக தெரிவிக்குமாறு தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!