News December 18, 2025

குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

குற்றாலத்தில் அமைந்துள்ள திருகுற்றால நாதர்- குழல்வாய்மொழி அம்பாள் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 25ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 29ம் தேதி உள்பிரகாரத்தில் நடராஜர் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் ஜனவரி 2 காலை 9 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெறும் 3ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தாண்டவ தீபாராதனை நடக்கும்.

Similar News

News December 23, 2025

தென்காசியில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை

image

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன்அய்யசாமி தென்காசி பகுதிக்கான UDAN
(உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) விமான நிலையம் அமைக்க வேண்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தராம்மோஹன் நாயுடு கிஞ்சராப்பு – இடம் டெல்லியில் நேரில் சந்தித்து இன்று கோரிக்கை மனு வழங்கினார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 23, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனிமொழி எம்பி வருகை

image

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வரும் டிசம்பர்.28ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருகை தருவதை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News December 23, 2025

தென்காசி: ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு

image

AAY மற்றும் PHH அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலை கடையில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் அல்லது தமிழ்நாட்டில் எந்த ஒரு நியாய விலை கடையிலையும் 31/12/2025 க்குள் கைரேகை பதிவு செய்யுமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!