News October 11, 2025
குற்றாலநாதர் கோயிலில் கொடியேற்றம்

தென்காசி குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜெயமணிசுந்தரம் பட்டர் தலைமையில் நடந்தது. தினமும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெற உள்ளது. அக்.12 பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 15 நடராசர் தாண்டவ தீபாராதனை, 16 அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவம், 18 விஷு தீர்த்தவாரி, கேடய காட்சி நடைபெற உள்ளது.
Similar News
News October 11, 2025
தென்காசியில் கூட்டுறவு உதவியாளர்கள் பணிக்கான தேர்வு

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடத்திற்கான தேர்வு தென்காசி தனியார் பள்ளியில் இன்று (அக்11) எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் துணைப்பதிவாளர்கள் கனகசுந்தரி, நரசிம்மன், கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
News October 11, 2025
தென்காசி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசிமாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க..
News October 11, 2025
தென்காசி நகராட்சி சந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது

தென்காசி மாவட்டம், வாய்க்கால் பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த தென்காசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின்பு இன்று கடைகளை திறந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான்கு நாட்கள் வியாபாரிகள் புதிய கடைகள் பழைய வியாபாரிகளுக்கே நகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.