News October 16, 2025

குற்றாலத்தில் குளிக்க அனுமதி

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள், அருவிகளுக்கு நீர் வார்த்து அதிகமானது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. மழையின் அளவு குறைத்து அருவிகளில் சீராக தண்ணீர் விழுவதால் நேற்று முதலே குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Similar News

News October 16, 2025

BREAKING: தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குற்றலாம், தென்காசி நகர் பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

News October 15, 2025

நெல்லை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’

News October 15, 2025

தென்காசி: நாய் பொம்மை பரிசளித்த கவுன்சிலர்

image

இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வந்த நிலையில், பாஜக கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சியில் கோரிக்கை வைத்துள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த தவறிய, 50க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்த பின்பும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகராட்சி சேர்மனை கண்டித்து கவுன்சிலர் ரேவதி பாலீஸ்வரன் நாய் பொம்மை பரிசளித்தார்.

error: Content is protected !!