News October 31, 2025
குற்றாலத்தில் கடைகள் ஏலம் அறிவிப்பு

குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரருவிப் பகுதியில் சந்தனம் குங்குமம் தற்காலிக கடை அமைத்திட நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 முடிய உள்ள கால அளவிற்கு அனுபவித்து கொள்ளும் பொருட்டு நிபந்தனைகளுக்குட்பட்டு குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 07-ம் தேதி (07.11.2025) வெள்ளிக்கிழமை ஏலம் நடத்தப்படும்.
Similar News
News October 31, 2025
சிலம்பு அதிவிரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

செங்கோட்டை – தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண் : 20681-20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் கூடுதல் ஒரு பெட்டிகள் நவம்பர் – 1 முதல் ஏப்ரல் வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
News October 31, 2025
தென்காசி: GHல் இவை எல்லாம் இலவசம்., தெரிஞ்சுக்கோங்க!

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-222312 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News October 31, 2025
தென்காசி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் -படியும். தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர் (பொதுத் தேர்தல்) சென்னை, அறிவுரையின்படியும் தென்காசி மாவட்டத்தில் 01.01.2026-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 04.11.2025 முதல் 4.12.2025 வரை ஒரு மாத காலம் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.


