News March 20, 2026
குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை உறுதி: கனிமொழி

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி எனவும் தனது X பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், துயரிலிருந்து மீண்டு வரவும் துணையாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 8, 2026
ஒரு MLA-வின் பணிகள் என்ன? எவ்வளவு நிதி வழங்கப்படும்?

*MLA தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ₹3 கோடி வழங்கப்படுகிறது.
*இதைக் கொண்டு குடிநீர், பள்ளிகள் கட்டமைப்பு, சிறிய பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ளலாம்.
*சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் திட்டங்கள், தீர்மானங்களுக்கு தொகுதி மக்களின் நலன் சார்ந்து ஆதரவு (அ) எதிர்ப்பு தெரிவிக்க MLA-வுக்கு உரிமை உண்டு. *சபாநாயகர், து.சபாநாயகர், ராஜ்யசபா MP-க்களை MLA-க்களே தேர்வு செய்வர்.
News April 8, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. பரபரப்பு விளக்கம்

TN-ல் பல இடங்களில் கேஸ் சிலிண்டர் புக் செய்து 10 நாள்களுக்கு மேலாகியும் சிலிண்டர் கிடைக்காததால் மக்கள் ஏஜென்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த ஏஜென்சி உரிமையாளர்கள், அரசு அறிவுறுத்தலின்படி சிலிண்டர் இணைப்பு உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், விரல் ரேகையை பதிவு செய்யாதவர்களுக்கு ரசீது வராததால் விநியோகம் செய்ய முடிவதில்லை எனக் கூறியுள்ளனர்.
News April 8, 2026
அமைச்சர்கள் மனைவிகளில் யாருக்கு அதிக சொத்து?

தேர்தலில் போட்டியிடும் திமுக அமைச்சர்கள், வேட்புமனுவுடன் தங்கள் மனைவியரின் சொத்து விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், துரைமுருகன் மனைவி சாந்தகுமாரிக்கு ₹61 Cr, TRB ராஜா மனைவி ஷர்மிளாவுக்கு ₹59.82 Cr, காந்தி மனைவி கமலாவுக்கு ₹20.73 Cr , தங்கம் தென்னரசு மனைவி மணிமேகலைக்கு ₹17.26 Cr, உதயநிதி மனைவி கிருத்திகாவுக்கு ₹13.25 Cr இருப்பது தெரியவந்துள்ளது.


