News January 26, 2025
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோசமிட்ட பொதுமக்கள்

வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் நல்லதங்காள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நல்லதங்காள் சிலையை சேதப்படுத்தி உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் கோயிலுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோசமிட்டனர்.பின்னர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News October 27, 2025
விருதுநகர்: 12th முடித்தால் அரசு பள்ளியில் வேலை., நாளை கடைசி

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. நாளை கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News October 27, 2025
விருதுநகர்: போஸ்ட் ஆபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <
News October 27, 2025
விருதுநகரில் நாளை மின் தடை

விருதுநகர் மக்களே, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, மல்லிபுதூர், ஆலங்குலம், சுப்பையாபுரம், கங்கரக்கோட்டை, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, பெரியவள்ளிக்குளம், GN பட்டி, துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை, பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி ஆகிய மின் நிலையங்களில் நாளை (அக். 28) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேலும் அறிய <


