News February 1, 2025
குறைவான விலையில் தரமான உரங்கள்

கோவை வேளாண்மை இணை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையவழி வாயிலாக மற்றும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக செல்லும் முகவர் மூலமாகவும், விற்பனை செய்யப்படும் உரங்களை வாங்க வேண்டாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை வாங்கி பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 3, 2026
சூலூர் அருகே ஆண் சடலம்!

சூலூர் குளத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 3, 2026
கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் திருத்தேர் விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை (மார்ச்.4) காலை 10 மணி முதல், இரவு 10 மணி வரை, பேரூரில் இருந்து செட்டிவீதி ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே திரும்பி, பேரூர் பைப்பாஸ் ரோடு அடைந்து உக்கடம் வந்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
News March 3, 2026
திமுகவிற்கு தோல்வி பயம்: வானதிசீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.


