News October 27, 2024

குறைவான காற்று மாசு: திருச்சி பல்கலை பேரூர் சாதனை

image

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகம்/குறைவான காற்று மாசுடைய நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீட்டில் (ஏ.க்யூ.ஐ.) பட்டியலில் சுத்தமான காற்றுடைய பகுதியாக திருச்சியின் பல்கலை பேரூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம், மதுரை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

Similar News

News February 4, 2026

திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

News February 4, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

திருச்சி: உளுந்து கொள்முதல் அறிவிப்பு

image

மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்ச்.25ஆம் தேதி வரை உளுந்து பயிர் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இதற்கான முன்பதிவுக்கு சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு விவரங்களுடன், லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (9489482122) தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!