News June 16, 2024
குறைதீா் முகாம்: 95 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், 8 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேற்று(ஜூன் 15) நடைபெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா்க்கும் முகாமில் 95 மனுக்கள் அளிக்கப்பட்டன. இம்முகாமில் மொத்தமாக முகவரி மாற்றம், புதிய பெயா் சோ்த்தல், நீக்கல் கோரி 31 மனுக்களும், கைப்பேசி எண் மாற்றம் கோரி 38 மனுக்களும், குடும்பத் தலைவா் பெயா் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் கோரி 26 மனுக்களும் என மொத்தமாக 95 மனுக்கள் வரப்பெற்றன.
Similar News
News October 31, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு காவல்துறையின் தகவல் நம்முடைய பாஸ்போர்ட், ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தேவை இல்லை. தற்பொழுது services.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்து உரிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு!
News October 31, 2025
நாமக்கல்: புதிய பொலிவுடன் சித்த மருத்துவமனை!

நாமக்கல் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன ஆயுர்வேதம் யோகா யுனானி சித்த ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்து சிறப்பம்சங்களும் சித்த பிரிவுக்கு 60 படுக்கைகளும் ஆயுஷ் பிரிவுக்கு 50 படுக்கைகளும் இது தவிர நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன (நவ-2ல்) திறப்பு விழா நடைபெற உள்ளது.
News October 31, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர <


