News February 16, 2026
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 676 கோரிக்கை மனுக்கள்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இன்று (பிப்.16) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் பொதுமக்களிடம் 676 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், பயிற்சி ஆட்சியர் அப்துல் ரஷீது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News February 17, 2026
அவடி: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர்: ஆவடி அருகே கடந்த 2024-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாடி பகுதியைச் சேர்ந்த (27) வயதான மகத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.16) மகத் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News February 17, 2026
திருவள்ளூரில் கொடூர கொலை!

திருநின்றவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முகேந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கத்தியால் தாக்கியதில் முகேந்திரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் ரவிசங்கர் இருவரையும் கைது செய்தனர்.
News February 17, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


