News July 10, 2025

குறும்பட போட்டி.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

image

தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) 2025ம் ஆண்டிற்கான 11வது குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் எந்த மொழியிலும் (ஆங்கில வசனங்களுடன்) 3-10 நிமிட குறும்படங்களை ஆகஸ்டு 31, 2025க்குள் nhrcshortfilm@gmail.com-க்கு அனுப்பலாம். முதல் மூன்று பரிசுகளாக ரூ.2 லட்சம், ரூ.1,50,000, ரூ.1,00,000, சிறப்பு பரிசாக ரூ.50,000 வழங்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

Similar News

News July 10, 2025

தூத்துக்குடி: குரூப் 4 தேர்வு: 37,005 பேர் எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நாளை மறுநாள் (ஜூலை 12) அன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டையாபுரம் உள்ளிட்ட 10 வட்டங்களில் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 37,005 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 31 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News July 10, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 95141 44100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!