News November 22, 2025
குறுக்கே நிற்கும் PAK.. இந்தியா – ஆப்கன் எடுத்த முடிவு

இந்தியாவும், ஆப்கனும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. ஆனால், போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அடிக்கடி சாலைகளை மூடுவதால், கடல் மற்றும் வான்வழியாக வர்த்தகத்தை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாகவும், டெல்லி, அமிர்தரஸிலிருந்து காபூலுக்கு 2 சிறப்பு சரக்கு விமானங்கள் மூலமும் வர்த்தகம் செய்ய உள்ளதாக இருநாடுகளும் அறிவித்துள்ளன.
Similar News
News February 13, 2026
நோவாவுடன் கூட்டணி சேர்ந்தார் நடிகர் அஜித்

தனது ரேஸிங் அணிக்காக, கேம்பா எனர்ஜி டிரிங்க் நிறுவனத்தைத் தொடர்ந்து, ‘நோவா லைஃப் ஸ்பேஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்திவரும் நோவா, விளையாட்டு துறையில் தனது பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. ஸ்பான்சர் அளிப்பதற்கு நன்றி தெரிவித்து புதிய சீருடையில் அஜித் இருக்கும் போட்டோவை அவரது அணி வெளியிட்டுள்ளது.
News February 13, 2026
திமுகவுக்கு இரவு 7 மணி.. தவெகவுக்கு மதியம் 12 மணி?

சேலத்தில் விஜய்யின் பிரசாரத்தில் <<19130205>>சூரஜ்<<>> என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் வெயிலின் தாக்கம் குறைவான மாலை நேரத்தில் TVK கூட்டங்களுக்கு அனுமதி தருவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. திமுகவின் கூட்டங்களுக்கு இரவு 7 மணிக்கு மேலாகவும், தவெகவிற்கு மட்டும் மதியம் 11, 12 மணி என அனுமதி தருவது ஏன் எனவும் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News February 13, 2026
குழந்தைகள் இதையெல்லாம் கவனிக்கிறாங்க.. கவனம்!

உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என நினைக்க வேண்டாம். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் அவர்கள் கவனிக்கின்றனர். குறிப்பாக, ➤குரலை வைத்தே உங்கள் மனநிலையை கணிப்பர் ➤நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என கவனிக்கின்றனர் ➤பிரச்னையை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை நோட் செய்கிறார்கள் ➤நீங்கள் கற்பிப்பதை நீங்கள் முதலில் ஃபாலோ செய்கிறீர்களா என பார்க்கிறார்கள். எனவே கவனமாக இருங்கள். SHARE.


