News July 22, 2024

குறவர்கள் சாதி சான்றிதழ் வழங்க ஆட்சியரிடம் மனு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் குறவர்கள் இன மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள், தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே எங்கள் பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்விடம் மனு கொடுத்தனர்.

Similar News

News August 16, 2025

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

image

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News August 15, 2025

பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தண்டாயுதபாணி திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான தண்டாயுதபாணி சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 15, 2025

பெரம்பலூர்: இலவச AI பயிற்சி! APPLY NOW

image

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து பயன்பெறவும். இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!