News December 24, 2024
குரூப் 4 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் TNPSC GROUP 4 /VAO பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது எனவே மேற்கண்ட பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் https://forms.gle/8z5C7yeZwGiSDyze9 இந்த Link ல் google form ஐ பூர்த்தி செய்து பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
Similar News
News August 20, 2025
ராணிப்பேட்டையில் இபிஎஸ் சுற்றுப்பயணம்

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.20) ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
ராணிப்பேட்டை: உங்களுக்கு சர்க்கரை நோயா?

ராணிப்பேட்டை மக்களே நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு (SHARE) பண்ணுங்க.
News August 20, 2025
நெமிலியில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை, நெமிலி இன்று (ஆக.19) வடகண்டிகையில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் துணை முகவராக அருண் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார். போலீசார் விசாரணையில், அதிக வட்டி தருவதாக வாக்குறுதியளித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.