News December 31, 2024
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.8ம் தேதி தொடங்கவுள்ளன. எனவே இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
Similar News
News December 24, 2025
ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 24, 2025
கோபி: செங்கோட்டையனை எதிரித்து மனு

கோபி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என்ற சூழலில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவரின் அண்ணன் மகன் கே.கே. செல்வன் அதிமுக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேலும் கோபியில் போட்டியிட மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வி.கே. சி.சிவகுமார் விருப்ப மனுவை வழங்கியுள்ளார்.
News December 24, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு….

பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது, பாதுகாப்பிற்காக வரிக்குதிரைக் கோடுகளை (Zebra Crossing) கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவை பாதசாரிகளுக்கான பாதுகாப்பான இடத்தைக் குறிக்கின்றன, வரிக்கோடுகளைப் பயன்படுத்தும்போது, சாலையைக் கடப்பதற்கு முன் இருபுறமும் பார்த்து, வாகனங்கள் முழுமையாக நின்ற பின்னரே கடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


