News September 27, 2025
குரூப் 2 தேர்விற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை செப்- 28 (ஞாயிறு )டிஎன்பிசி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் 8:30 மணிக்கு கட்டாயம் இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தேர்வர்கள் எளிமையாகவும் சீக்கிரமாகவும் தேர்வு மையங்களுக்கு சென்று வர ஏதுவாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் நாளை ஒரு நாள் மட்டும் இயக்கப்பட உள்ளது என கிருஷ்ணகிரி போக்குவரத்து மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
கிருஷ்ணகிரி: 12th போதும், ஆதாரில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
ஓசூர்: இன்ஸ்டா காதலால் பறிபோன உயிர்!

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


