News December 9, 2024

குருவாயூர் ரயில் தற்காலிகமாக மாற்று பாதையில் இயக்கம்

image

திண்டுக்கல் – திருச்சி இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வண்டி எண் 16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் டிசம்பர் மாதம் 12,14,17,21,26,28,31, மற்றும் ஜனவரி மாதம் 3,4,6,7,8,9,11 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கமாக வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் டிசம்பர் 14 இல் மட்டும் மதுரை, சோழவந்தான் வழிதடத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

மதுரை: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

image

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

BREAKING மதுரை: சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒப்புதல்

image

மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஏற்கெனவே மக்களவையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.

News March 10, 2026

மதுரை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!