News October 27, 2024
குருபூஜைக்கு சென்று திரும்பும் போது விபத்தில் இளைஞர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் விக்னேஷ்(24). இவர் இன்று(அக்.27) காலை ராமேஸ்வரத்திலிருந்து காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு காரில் சென்றார். இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை மடக்கொட்டான் அருகே சென்ற போது காரில் இருந்து தவறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
Similar News
News February 21, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் .21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News February 21, 2026
BREAKING: இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநாடு 2026-ல் சீமான் அறிவித்து வருகிறார். சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளார். இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்களின் விவரம் இதோ.!
1.பரமக்குடி – எழில் இளவரசி
2.திருவாடனை – பிரேம்நாத்
3.இராமநாதபுரம் – முத்து கேசவன்
4.முதுகுளத்தூர் – சந்திர பிரபா
News February 21, 2026
இராமநாதபுரம்: பெற்றோர்கள் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


