News April 28, 2025
குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.02) இரவு 9 மணி முதல் இன்று (நவ.3) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. குணவர்மன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News November 2, 2025
தருமபுரி: மாற்றுத்திறனாளிகள் 5வது மாவட்ட மாநாடு

தருமபுரி நகரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 5வது மாவட்ட மாநாடு இன்று (நவ.02) தொடங்கியது. இந்த மாவட்ட மாநாடு நவம்பர் 2 மற்றும் 3, என இரண்டு நாள் நடைபெறும். மாநாட்டின் முதல் நாளான இன்று பேரனை நடைபெற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின் பொதுமக்களும் இந்த பேரணிக்கு ஆதரவு அளித்தனர்.
News November 2, 2025
தருமபுரி: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


