News March 22, 2024
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் பகுதி ரத்து

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டைக்கு பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர் வழியாக தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 23, 24) ஆறு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 29, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 21.67 மி.மீ. மழை

திருவள்ளூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 28.10.2025 காலை 6.00 மணி முதல் 29.10.2025 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுவதும் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 33 மி.மீ., ஆவடியில் 31 மி.மீ., பொன்னேரியில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 21.67 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 29, 2025
திருவள்ளூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
திருவள்ளூர்: மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தை பலி

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர்- சுகன்யா தம்பதி. இவர்களின் 1 வயது மகள் அனன்யாவிற்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தபோது, காய்ச்சல் சரியானது. திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


