News August 26, 2024
கும்மிடிப்பூண்டியில் 2 கல்லூரி மாணவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலில் நேற்று பட்டாக்கத்தியுடன் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 2 கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இதைக் கண்ட பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் கத்தியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News March 10, 2026
திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 10, 2026
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 மனுக்கள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 9) மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 48, மகளிர் உரிமை தொகை 63, சமூக பாதுகாப்பு திட்டம் 63, வேலைவாய்ப்பு வேண்டி 48, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 27, இதர துறை 251 என, மொத்தம் 500 மனுக்கள் பெறப்பட்டன.
News March 10, 2026
திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


