News February 27, 2025
கும்மிடிப்பூண்டிக்கு வரும் 18 மின் ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வரும், 18 புறநகர் ரயில்கள் வருகின்ற பிப்.27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 நாட்களும் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 வரை இயங்கும் மின் ரயில்கள் இயங்காது. அதேநேரம், பொன்னேரி வரை 8 சிறப்பு ரயில்களும், மீஞ்சூர், எண்ணூர் வரை தலா 4 மின்ரயில்களும் இயங்கும்.
Similar News
News August 29, 2025
திருவள்ளூர்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

திருவள்ளுர் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
News August 29, 2025
திருவள்ளூர்: சென்ட்ரல் மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி (இரவு 11:20 ரயில்) மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் (இரவு 9:25 மணி ரயில்) இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
திருவள்ளூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.