News April 7, 2024

கும்பகோணம்: இறைச்சிக்கு சென்ற இறந்த பசு! ஷாக்

image

கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் அருகே நேற்று(ஏப்.6) மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் இறந்து 2 நாளான பசு ஒன்றை, வைக்கோல் வைத்து மறைத்து எடுத்து சென்ற நிலையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசாரின் தீவிர விசாரணையில், உணவகத்திற்கு இறைச்சிக்கு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Similar News

News February 8, 2026

தஞ்சை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

தஞ்சை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!

News February 8, 2026

தஞ்சை: வெறி நாய் கடித்து 5 பேர் படுகாயம்

image

பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சோழனார்வயல் பகுதியை வினோதா (31). திவ்யா நீலகண்டன்(30), கழனிவாசல் அன்வருதியின்(50), வினோத்(28), ரெட்டவயல் சுப்ரமணியன் (50) ஆகிய 5 பேர் வெறிநாய் கடித்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News February 8, 2026

தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை, பேராவூரணி, மணிமண்டபம், மின்நகர் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!

error: Content is protected !!