News March 19, 2024
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று(மார்ச் 18) நடந்தது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்றினார். முதுநிலை பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
Similar News
News September 16, 2025
தஞ்சை இளைஞர்களே வேலை இல்லையா? இங்க Try பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வருகிற செப்.19ம் தேதி தஞ்சாவூர் வேலை வாய்ப்பு முகாமில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுபவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு செல்லலாம்! தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
தஞ்சை மக்களே இன்றைய தினம் மறக்காதீங்க!

தஞ்சை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅தஞ்சாவூர்
அண்ணா நூற்றாண்டு மண்டபம், RMH ரோடு,
✅பட்டுக்கோட்டை
KKT சுமங்கலி மஹால்,
✅ஆடுதுறை
வீரசோழன் கோ.சி.மணி திருமண மண்டபம்,
✅திருவோணம்
ஊராட்சி மன்ற அலுவலகம், பொய்யுண்டார்குடிகாடு
✅கும்பகோணம் நகர்ப்புற பஞ்சாயத்து
சோழன் மஹால், அண்ணலக்ரஹாரம்
✅நாஞ்சிக்கோட்டை
மாதாகோட்டை மக்கள் மன்றம் ,
SHARE IT
News September 16, 2025
தாட்கோ மூலம் சிறப்பு திட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் சுயதொழில் தொடங்குவதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தகுதி உடையவர்கள் அருகில் உள்ள இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.