News August 16, 2024
கும்பகோணத்தில் ரூ.1.6 கோடிக்கு பருத்தி ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் குவிண்டாலுக்கு சராசரி விலையாக ரூ.6,789-க்கும் ஏலம் போனது. ஏலம் போன மொத்த பருத்தியின் மதிப்பு 1.6 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கும்பகோணம், கடலூர், விழுப்புரம், தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 16, 2025
தஞ்சை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 16, 2025
தஞ்சை: 6 பேர் மீது பாயிந்த குண்டர் சட்டம்

ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக நிர்வாகியுமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய், மருதுபாண்டி, மகேஷ், சேரன், விஜய், ஆகாஷ் ஆகிய ஆறு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
News October 16, 2025
தஞ்சை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

தஞ்சாவூர் மாநகராட்சியில் காமாட்சி மஹால், கும்பகோணம் மாநகராட்சியில் மூர்த்தி கலையரங்கம் மற்றும் பேராவூரணி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் இன்று (அக்.16) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளன. மேலும், மன்னார்சமுத்திரம் அங்காளம்மன் கோவில் மண்டபத்திலும், திருக்கருக்காவூர், மங்களம் மஹாலிலும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.