News October 24, 2024
கும்பகோணத்தில் 2 இளைஞர்கள் கைது

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். சிவராஜ் என்பவரை தாக்கி ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்த 2 பேர், தாமஸ், பிரவீன், கைது செய்யப்பட்டு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News January 28, 2026
தஞ்சை: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வாரத்தில் 5 நாட்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் முன்பு மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து, கோரிக்கை முழக்கமிட்டனர்.
News January 28, 2026
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிரமப்பட்டினம் துணை மின் நிலையத்தில், இன்று (ஜன.28) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அதிரமப்பட்டினம், ராஜாமடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!